தமிழகம் வந்தடைந்தார் பிரகாஷ் ஜவடேகர் பாஜகவில் இணையப்போகும் அந்த முக்கிய பிரபலம் யார்?

தமிழகம் வந்தடைந்தார் பிரகாஷ் ஜவடேகர் பாஜகவில் இணையப்போகும் அந்த முக்கிய பிரபலம் யார்?

தமிழக பாஜகவில் இன்று (25/12/20) முக்கிய பிரபலம் இணைய இருப்பதாக பாஜக மாநில தலைவர் முருகன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார், யார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாளை அனைத்திற்கும் விடை கிடைக்கும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழக பாஜகவின் திடீர் அழைப்பின் பேரில் நேற்று இரவு சென்னை வருகை தந்து இருக்கிறார், அவரை மாநில தலைவர் முருகன் இரவு 9.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் முக்கிய கட்சி பிரமுகர்களுடன் சென்று வரவேற்றார், அதன் பின்பு நட்சத்திர விடுதியில் தங்கிய மத்திய அமைச்சரிடம் சிறிது நேரம் முருகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கட்சியினர் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் யார் அந்த முக்கிய பிரபலம் என்ற கேள்வியும் தேடலும் அதிகரித்துள்ளது, ஏன் என்றால் திமுக சிட்டிங் எம் எல் ஏ உட்பட பலர் தொடர்ச்சியாக பாஜகவில் இணைந்து வருகின்றனர், கடைசியாக குஷ்பூ, சரவணகுமார் IRS, மதன் ரவிச்சந்திரன் போன்ற பிரபலங்கள் பாஜகவில் டெல்லியில் சென்று இணைந்தனர்.

அதன் பிறகு பிரபலங்கள் பாஜகவில் இணையும் நிகழ்வு நடக்கவில்லை இந்நிலையில் புதிதாக பிரபலங்கள் மீண்டும் பாஜகவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர், தற்போதைய நிலையில் பாஜகவில் இணைய போகும் அந்த முக்கிய பிரபலம் திமுகவை சேர்ந்தவரா, திரை பிரபலமா இல்லை பத்திரிக்கையாளரா அல்லது வேறு கட்சியை சேர்ந்தவரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே திமுக பிரபலங்கள் ஆலடி அருணா பூங்கோதை, ஜெகத்ரட்சகன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல பெயர்கள் பாஜகவில் இணைய போவதாக வெளியானது, மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா அவரது கணவர் போன்றோர் பாஜகவில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக நாம் நமது TNNEWS24 ல் குறிப்பிட்டு இருந்தோம்.

இவர்கள் தவிர புதிதாக வேறு யாரேனும் பாஜகவில் இணைகிறார்களா அது எது போன்ற தாக்கத்தை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்த போகிறது என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். இவை அனைத்திற்கும் இன்னும் சிறிது நேரத்தில் விடை தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami