சொந்த தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட சோகம்! இரும்பு பெண்மணி தகர டப்பாவாக மாறினார்!!

சொந்த தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட சோகம்! இரும்பு பெண்மணி தகர டப்பாவாக மாறினார்!!

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில மக்கள் இடையே இரும்பு பெண்மணி என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டவர், கம்யூனிஸ்ட் கட்சியினரால் வன்முறை களமாக இருந்த மேற்கு வங்கத்தை ஒரே தேர்தலில் கைப்பற்றி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றவர் என்பதால் அவருக்கு அந்த பட்டம் சூட்டப்பட்டது.

இருப்பினும் இப்போது மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளினால் அவரது கட்சி படு தோல்வி அடையும் நிலைக்கு சென்றுள்ளது 2016 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத பாஜக இப்போது 40% வாக்குகளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுள்ளது அத்துடன் 18 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க மம்தா பானர்ஜி தன்னுடைய தற்போதைய சிட்டிங் MLA தொகுதியில் இருந்து, வெளியேறி வேறு தொகுதியில் போட்டியிட இருக்கிறார், மம்தா பானர்ஜி 2011 மற்றும் 2016 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள பாபனிபூர் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார், பிராமணரான மம்தா பானர்ஜி அந்த தொகுதியை தேர்ந்து எடுக்க அங்கு பிராமணர்கள் வாக்கு மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் சற்று கூட இருந்ததால் பாபனிபூர் தொகுதியை தேர்வு செய்தார்.

ஆனால் 2011 ம் ஆண்டு மம்தா பெற்ற வாக்குகளை 2016- ம் ஆண்டு பெறமுடியவில்லை முதல் தேர்தலில் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மம்தா,2016-ல் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார், ஆனால் அதுவும் நீண்ட நாள் நிலைக்க வில்லை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை காட்டிலும் திரிணமூல் வேட்பாளர் கூடுதலாக பெற்ற வாக்கு 3128 மட்டுமே அதாவது மம்தா தொகுதி மக்கள் பாஜகவிற்கு மெல்ல மெல்ல மாறி வந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மம்தா தனது சொந்த தொகுதியில் இருந்து இப்போது வங்க தேச முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தெற்கு 24 பார்க்கானா மாவட்டத்தில் உள்ள மெடியா புருஸ் என்கிற தொகுதிக்கு மாற இருக்கிறார், இப்போதே அதற்கான பணிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த தொகுதியில் இருந்து மம்தா வேறு இடத்திற்கு மாறுவது அம்மாநில மக்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முதல்வர் ஏன் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிக்கு மாறவேண்டும் அப்படி என்றால் இந்துக்கள் வாக்கு வங்கியை மம்தா இழந்துவிட்டாரா? இரும்பு பெண்மணி என பெயர் பெற்றவர் இப்போது சொந்த தொகுதியில் கூட மீண்டும் களம் கான முடியாமல் வேறு தொகுதிக்கு ஓடுகிறாரே இது என்ன வகையில் சிட்டிங் முதல்வருக்கு அழகு என்ற குரல்கள் எழ தொடங்கியுள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமிட்ஷா, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை மேற்கு வங்க மாநிலத்திற்குள் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்தார் மம்தா, அவர்களது ஹெலிகாப்டர்கள் இறங்க தடை விதித்தார், இந்த சூழலில்தான் இப்போது தனது சொந்த தொகுதியில் இருந்தே வேறு தொகுதிக்கு ஓடும் நிலைமை மேற்கு வங்கத்தில் இரும்பு பெண்மணி என வலம் வந்த மம்தா பேனேர்ஜிக்கு உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami