நிலவில் இடம் வாங்கிய கணவர்
நிலவில் இடம் வாங்கிய கணவர்
காதலைப் பற்றிய வர்ணனையில்
நிலவிற்கு எப்போதும் ஒரு தனியிடம்
உண்டு. அந்த வகையில் ராஜஸ்தானைச்
சேர்ந்த தர்மேந்திரா என்பவர் தனது
அன்பு மனைவி அனிஜாவிற்காக திருமண
நாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கி
கொடுத்து அசத்தியுள்ளார்.

நிலத்தை லூனர்
சொசைட்டி என்ற அமெரிக்க நிறுவனம்
விற்றுள்ளது. ஷாருக்கான் உள்ளிட்ட
பல பாலிவுட் பிரபலங்கள் வரிசையில்
தற்போது தர்மேந்திராவும் இடம்
பெற்றுள்ளார்.
BREAKING: நடிகர் ரஜினிக்கு
மருத்துவமனை கடும் எச்சரிக்கை!
ரஜினியின் உடல்நிலை தேறியுள்ளதால்
இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்
என மருத்துவமனை நிர்வாகம்
அறிவித்துள்ளது.
உடல் உறுப்பு மாற்று
அறுவை சிகிச்சை செய்து கொண்டதாலும்,
உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும்
அவர் மன அழுத்தமில்லாத, இலகுவான
பணிகளை மட்டும் மேற்கொள்ள
வேண்டும், என கடுமையாக
எச்சரித்துள்ளது. ஒரு வாரம் கண்டிப்பான
ஓய்வு அவசியம் என்றும், கொரோனா
தொற்று ஏற்படக்கூடிய சூழலை
உருவாக்கிக்கொள்ள வேண்டாம் என்றும்
கூறியுள்ளது.
ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு –
பொதுமக்களுக்கு அறிவிப்பு..
பண்டிகை காலத்தை முன்னிட்டு
சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட
இடங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு
செல்லும் ரயில்கள் உட்பட 22 சிறப்பு
ரயில்களின் சேவை ஜனவரி இறுதி வரை
நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே
அறிவித்துள்ளது.
நாகர் கோவில் –
மும்பை, மதுரை – பிகானெர், கொச்சுவேலி
இந்தூர், சென்னை எழும்பூர் –
ஜோத்பூர், ராமேஸ்வரம் – ஒகா, நெல்லை
-பிலாஸ்பூர் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள்
நீட்டிக்கப்பட்டுள்ளன.