BREAKING ஆட்சி அமைத்த சில மாதங்களில் பீகார் கூட்டணி உடைக்கிறது நிதிஷ்குமார் அறிவிப்பால் பரபரப்பு!!
BREAKING ஆட்சி அமைத்த சில மாதங்களில் பீகார் கூட்டணி உடைக்கிறது நிதிஷ்குமார் அறிவிப்பால் பரபரப்பு!!
மீண்டும் முதலமைச்சராக வேண்டுமெனத் தான் விரும்பவில்லை என்றும், நெருக்கடி காரணமாகப் பதவியேற்றுள்ளதாக நிதிஷ்குமார் தெரிவித்ததை அடுத்து பிஹாரில் நிதிஷ்குமார் பாஜக கூட்டணி விரைவில் முடிவிற்கு வரும் சூழல் உண்டாகியுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 74 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 43 தொகுதிகளையும் பிடித்தன. அதிக இடங்களை வென்ற போதும் பாஜக முன்பே வாக்குறுதி அளித்தபடி நிதிஷ்குமாரை முதல்வர் ஆக்கியது. இந்தக் கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமாரே முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் திடீர் என நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பாஜகவில் இணைந்தனர், இதனால் இரண்டு கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது அத்துடன் பாஜக ஆதரிக்கும் லவ் ஜிகாத் தடைச் சட்டத்தை ஐக்கிய ஜனதாதளம் தேவையில்லை என எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறி வருகிறது இதனால் கூட்டணியில் கசப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாட்னாவில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பீகார் முதல்வர் நிதிஷ் தான் விரும்பி இந்தமுறை முதல்வர் ஆகவில்லை நெருக்கடியால் பதவி எற்றேன் என கூறியுள்ளார், நிதிஷ் குமார் இவ்வாறு தெரிவித்து இருப்பது கூட்டணிக்குள் விவாதத்தை உண்டு செய்துள்ளதால் ஆட்சி கவிழும் சூழல் உண்டாகியுள்ளது.
நிதிஷ் குமார் பாஜக கூட்டணியை முறித்து கொண்டால் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை அதே நேரத்தில் லல்லுவின் RJD கட்சியுடன் மீண்டும் கூட்டணி சேர நினைத்தால் அவருக்கு பீகார் அரசியலில் நிரந்தர மூடுவிழா நடத்தப்படும் என்பதால் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதுடன் அரசியலில் இருந்தும் அவர் வெளியேறலாம் என கூறப்படுகிறது.