ரஜினி முழுக்கு போட்ட நிலையில் பாஜகவில் இணையும் பிரபலம் டெல்லிக்கு யார் யார் பயணம்!!

ரஜினி முழுக்கு போட்ட நிலையில் பாஜகவில் இணையும் பிரபலம் டெல்லிக்கு யார் யார் பயணம்!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை எனவும் உடல்நிலையை கருத்தில்கொண்டும் தன்னை நம்பியவர்களை ஏமாற்ற விரும்பவில்லை என தெரிவித்து அரசியல் ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ரஜினி.

ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் தங்களுக்கு எதிராக முடியுமோ என அச்சம் கொண்ட அதிமுக, திமுக கட்சியின் தலைவர்கள் ரஜினியின் முடிவை வரவேற்றுள்ளனர், தனிப்பட்ட முறையில் திமுக மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது தனது கட்சியினர் யாரும் ரஜினியின் முடிவு குறித்து எந்த விமர்சனத்தையும் முன்வைக்க வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ரஜினி அரசியல் இயக்கம் தொடங்கினால் தங்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருப்பதாக கருதிய அழகிரி என்ன. செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது தாயை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்ற அழகிரி ஜனவரி 3 ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

தனி கட்சி தொடங்கி ரஜினியுடன் கூட்டணி சேரலாம் என்ற முடிவை அழகிரி எடுத்து இருந்ததாகவும் அதன் மூலம் தென் மாவட்டங்களில் போட்டியிட அழகிரி முடிவு செய்துள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்பட்டது, இந்த நிலையில் ரஜினி இன்றைய தினம் தான் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பு அழகிரி தரப்பிற்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஆனால் இது குறித்து அழகிரி தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டும் மதுரையை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் ஜனவரி 3 ம் தேதி நடைபெறும் ஆதரவாளர்கள் கூட்டத்தில் என்ற மாற்றமும் இல்லை அனைவரும் மதுரை வாருங்கள் அங்கு வைத்து என்னுடைய முடிவை கூறுகிறேன் எனவும் அழகிரி தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் ரஜினி அரசியல் வருகைக்கு முழுக்கு போட்ட நிலையில் அவரது கட்சியில் இணைவதாக காத்திருந்த பலர் பாஜகவில் இணைய இருப்பதாகவும், முக அழகிரி, கராத்தே தியாகராஜன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் என 30 மேற்பட்ட பிரபலங்கள் பாஜகவில் JP நட்டா தமிழக வருகையின் போது பாஜகவில் இணையலாம் என தகவல் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami