டார்கெட் 2021 சக்ஸஸ் தமிழக பாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர் மற்றும் பிரபல நடிகர்கள்!! நாளை இணைய போகும் முன்னாள் மேயர்

டார்கெட் 2021 சக்ஸஸ் தமிழக பாஜகவில் இணைந்த கிரிக்கெட் வீரர் மற்றும் பிரபல நடிகர்கள்!! நாளை இணைய போகும் முன்னாள் மேயர்

ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவிப்பதற்கு முன்பு பல பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள், சின்னத்திரை நடிகர்கள் என பலர் பாஜகவில் தொடர்ச்சியாக இணைந்து வந்தனர், அதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் குக செல்வம், VP துரைசாமி KP ராமலிங்கம், விசிக கட்சியின் சிட்டிங் மாவட்ட செயலாளர், மாநில நிர்வாகிகள், காங்கிரஸ் அமமுக என பல கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தனர்.

ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட பின்பு பாஜகவில் பிரபலங்கள் இணைவது குறைந்து வந்தது, இந்நிலையில் நேற்றைய தினம் ரஜினி கட்சி தொடங்குவது இல்லை எனவும் அரசியலில் ஈடுபட போவதில்லை எனவும் தெரிவித்தார், எனவே ரஜினி கட்சியில் இணையலாம் என காத்திருந்த பல பிரபலங்கள் மீண்டும் பாஜக பக்கம் திரும்பியுள்ளனர்.

இதில் துணை நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் தங்களை பாஜக தேசிய பொது செயலாளர் CT ரவி முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்து கொண்டனர், மேலும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாகவும்.

இவர்கள் மட்டுமின்றி திமுகவிற்கு எதிர்ப்பு நிலை அரசியல் மேற்கொள்ளும் பலர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் வழக்கம் போல் இனி பிரேக்கிங் செய்திகள் வெளியாகலாம் என பாஜக தரப்பில் பேசப்படுகிறது, பாஜகவை பொறுத்தவரை பிரபலங்கள் முக்கிய அரசியல் வாதிகள் ஆகியோரை தங்கள் கட்சியில் இணைப்பது என்றும்

வருகின்ற 2021 சட்டமன்ற பொது தேர்தலில் குறைந்தது 10 முதல் 15 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதே அதன் இலக்கு எனவும் அதனை தற்போது சக்ஸஸ் செய்து வருவதாகவும் அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami