புயல் காலத்தைப் போல் சென்னையில் கொட்டும் மழை!
புயல் காலத்தைப் போல்
சென்னையில் கொட்டும் மழை!
புயல் காலங்களில் பெய்வதைப் போல்
பருவமழையின் கடைசி காலகட்டத்தில்
சென்னையில் தொடர் மழை பெய்து
வருகிறது. நள்ளிரவு முதல் பெய்துவரும்
தொடர் கனமழையால் பல்வேறு
இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக
அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும்,
பிரதான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மேலும் சில செய்திகள் :
ஈஷா யோகா மைய மின்சார
வேலியில் சிக்கி யானை பலி!
கோவையில் ஈஷா யோகா மையத்தில்
போடப்பட்டுள்ள மின்சார வேலியில்
சிக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 3
நாட்களாக இந்த யானையை ஈஷா மைய
பணியாளர்கள் துரத்தியதாகவும், இன்று
அந்த யானை உயிரிழந்து கிடந்ததாகவும்
கூறப்படுகிறது. மேலும் அந்த மின்சார
வேலி சட்டவிரோதமானது எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.