Breaking: மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் ரிலீஸ் ஆகாது? பரபரப்பு தகவல்
Breaking: மாஸ்டர், ஈஸ்வரன்
படங்கள் ரிலீஸ் ஆகாது?
பரபரப்பு தகவல்
திரையரங்குகளில் 100% ரசிகர்களின்
அனுமதிக்கு எதிரான வழக்கை அவசரமாக
விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
தெரிவித்துள்ளது. இந்நிலையில், 100%
ரசிகர்களுக்கு அனுமதி என்ற உத்தரவை
திரும்ப பெற்றால் மாஸ்டர் படம்
மட்டுமே வெளியிடப்படும் என திருப்பூர்
சுப்ரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

100% இருக்கை அனுமதியை குறைத்தால்
ஈஸ்வரன் படம் வெளியிடப்படாது.
மாஸ்டர் படம் வெளியாகாமல் போனால்
மட்டுமே ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களை
பற்றி யோசிப்போம் என்றார்.
மேலும் சில செய்திகள் :
குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்….
குளிர்காலத்தில் சருமம் வறட்சி
அடையாமல் பாதுகாப்பது மிக முக்கியம்.
எனவே அதிக அளவில் தண்ணீர் குடிப்பது
முக்கியம். குளிர்காலத்தில் ஆல்கஹால்
சேர்க்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்தாமல்
இருப்பது, சருமத்தின் ஈரப்பதத்தை
தக்கவைக்கும்.
மேலும், கடுமையான
சோப்புகளை பயன்படுத்துவதை
தவிர்த்து, அடிக்கடி கற்றாழை ஜெல்லை
உபயோகிப்பது அவசியம்.
மேலும் சில செய்திகள் :
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
கொரோனா ஊரடங்கால் கடந்த சில
மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை
மாற்றமின்றி இருந்த நிலையில், தற்போது
மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள
அறிவிப்பின் படி, இன்று பெட்ரோல்
விலை ஒரு லிட்டருக்கு 21 காசுகள்
உயர்ந்து ரூ.86.96-க்கும், டீசல் விலை 26
காசுகள் உயர்ந்து 79.72-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.