BREAKING: மாஸ்டர் படத்தை வெளியிட தடை, இதில்- அதிரடி உத்தரவு
BREAKING: மாஸ்டர் படத்தை
வெளியிட தடை, இதில்- அதிரடி
உத்தரவு
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை
சட்டவிரோதமாக இணையத்தில்
வெளியிட உயர்நீதிமன்றம் தடை
விதித்துள்ளது. சட்டவிரோதமாக
400 இணையதளங்கள், 9 கேபிள்
டிவிக்களில் இப்படத்தை வெளியிட தடை
விதிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படம்
இணையத்தில் வெளியானால் பெருத்த
நஷ்டம் ஏற்படும் என்று அப்படத்தை
வெளியிடும் செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ
தெரிவித்துள்ளது.
மேலும் சில செய்திகள் :
நேதாஜியின் சகோதரர் மகள்
காலமானார்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் மகளும், பிரபல கல்வியாளருமான
பேராசியர் சித்ரா கோஷ் (90)
கொல்கத்தாவில் காலமானார்.
நேதாஜியின்
சகோதரரும் சுதந்திரப் போராட்ட
வீரருமான சரத் சந்திர போஸின் மகளான
சித்ரா கோஷ், நேதாஜியின் மரணம்
குறித்த ரகசிய ஆவணங்களை வெளியே
கொண்டுவர பாடுபட்டவர் என்பது
குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு
பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள்
இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சில செய்திகள் :
தங்கம், வெள்ளி விலை இவ்வளவு குறைவா?
சென்னையில் மாலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.
38,032-க்கும், கிராமுக்கு ரூ.51
குறைந்து ரூ.4,754-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.41,104-க்கும், கிராம் ரூ.
5,138-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி
விலை கிராமுக்கு 0.97 காசு குறைந்து
கிராம் ரூ.73.10-க்கும், கிலோ வெள்ளி ரூ.
73,100-க்கும் விற்கப்படுகிறது.