வா தலைவா- ரசிகர்கள் கோஷம்
வா தலைவா- ரசிகர்கள் கோஷம்
உடல்நலக் கோளாறு காரணமாக
அரசியலுக்கு வரப்போவதில்லை
என்று ரஜினி அறிவித்ததை தொடர்ந்து
சென்னையில் அவரது ரசிகர்கள்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் தடையை
மீறி போராடும் இவர்கள், ‘எங்களை
வாழ வைத்த தமிழகத்தை வாழ
வைக்க; உலகை அச்சுறுத்த வா
தலைவா’ என்று கோஷமிட்டு போராடி
வருகின்றனர். மேலும், ட்விட்டரில்
அரசியலுக்கு வாங்க_ரஜினி
இந்தியளவில் டிரெண்டிங்கில் உள்ளது.
மேலும் சில செய்திகள் :
குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க….
குழந்தைகள் கை சூப்புவதை
தவிர்க்க, அவர்களுக்கு கைகளை
பயன்படுத்தக்கூடிய விளையாட்டுப்
பொருட்களை வாங்கிக் கொடுங்கள். விரல்
சூப்புவதை கவனித்தால், உடனே அதை
எடு, இதை எப்படி செய்வது செய்து காட்டு
என பேச்சு கொடுங்கள். சாப்பிட ஏதாவது
வேண்டுமா என கேட்டு கொடுங்கள்.
கேரட், ஆப்பிள், பீட்ரூட் போன்ற கடித்து
சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை
பச்சையாக தோல் சீவி கொடுக்கலாம்.
மருந்துகளை தடவுவதை தவிருங்கள்.
மேலும் சில செய்திகள் :
மாஸ்டர் படம் வெற்றி பெற
வேண்டுதல்….
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்
விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர்
நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13
அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில்
அந்த படம் வெற்றி பெறுவதற்கு
அப்படத்தின் இயக்குநர் லோகேஷ்,
ரத்னகுமார், இசையமைப்பாளர் அனிருத்
ஆகியோர் திருவண்ணாமலை கோயிலுக்கு
சென்று வழிபாடு செய்துள்ளனர்.