Connect with us

Uncategorized

Hello world!

Published

on

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

Continue Reading
1 Comment

1 Comment

  1. A WordPress Commenter

    June 29, 2024 at 11:09 am

    Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

Published

on

By

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!
கொல்கத்தா – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று கோலகலமாக தொடங்குகிறது.

தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன.

கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

தொடக்க நிகழ்ச்சியில் பாடகா்கள் ஷ்ரேயா கோஷல், கரண் அஜ்லா, பாலிவுட் நடிகை திஷா பட்டானி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சிகள் மாலை 6 மணியளவில் தொடங்கி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது.

மொத்தம் 70 போட்டிகளை கொண்ட லீக் சுற்று, மே 18ம் தேதி முடிகிறது.

இன்றைய ஆட்டத்திற்காக கொல்கத்தா, பெங்களூரு அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

Continue Reading

india

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

Published

on

By

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

ரமலான் நோன்பினை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

“புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர்.

வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கொண்டாடப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இஸ்லாமிய பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக வருகை தந்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

Employment

அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 காலிப்பணியிடங்கள் – மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம்!

Published

on

By

3,274 vacancies in State Transport Corporations - Applications can be made from March 21!

அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 காலிப்பணியிடங்கள்

– மார்ச் 21 முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

8 மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் 756 இடங்களும்,
சேலத்தில் 486 இடங்களும்,
சென்னையில் 364 இடங்களும்
திருநெல்வேலியில் 362 இடங்களும்
கோவையில் 344 இடங்களும்,
மதுரையில் 322 இடங்களும்,
விழுப்புரத்தில் 322 இடங்களும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318 இடங்கள் நிரப்பப் பட உள்ளன.

ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு நாளை பிற்பகல் 1 மணி முதல் முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை http://www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

Trending