cinema
காஞ்சனா 4 படம்: புதிய தகவல்கள்
கோலிவுட்டில் பேய் படங்களுக்கு மீண்டும் வரவேற்பு:
- சமீபத்தில் வெளியான “அரண்மனை 4” படத்தின் வெற்றிக்குப் பிறகு, பேய் படங்களுக்கு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
- காமெடி பேய் படங்களுக்கு முன்னோடியாக திகழும் ராகவா லாரன்ஸ், “காஞ்சனா 4” படத்தை இயக்கவுள்ளார்.
படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?
- “காஞ்சனா 4” படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை ராகவா லாரன்ஸ் முடித்துவிட்டார், தற்போது படத்தின் அடுத்தடுத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நடிகர் யார்?
- “காஞ்சனா 4” படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்பது உறுதி.
- இவருடன் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதை:
- “காஞ்சனா 4” படத்தின் கதை பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
- முந்தைய பாகங்களைப் போலவே, இந்த பாகமும் காமெடி, ஹாரர் கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்ப்பு:
- “காஞ்சனா” படத்தின் முந்தைய பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.
- “காஞ்சனா 4” படமும் அதே அளவிற்கு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
cinema
டிசம்பர் 20ல் வெற்றிமாறனின் விடுதலை – 2
டிசம்பர் 20ல் வெற்றிமாறனின் விடுதலை – 2
வெற்றிமாறனின் விடுதலை –2 திரைப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார்.
இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘விடுதலை’.
இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று, பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளையும் பெற்றது.
இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார்.
இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, ஆர் எஸ் போடெயின்மென்ட் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
cinema
நவ.10ஆம் தேதி வெளியாகும் விடாமுயற்சி’ டீசர்!
நவ.10ஆம் தேதி வெளியாகும் விடாமுயற்சி’ டீசர்!
அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.
சுமார் 30 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிவடைந்ததாக ஜூலை 22ம் தேதி படக்குழு அறிவித்தது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது.
அதில் நடிகர் அஜித் உட்பட படக்குழுவினர் இடம்பெற்றிருந்தனர்.
அதன்பின், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.
இப்படத்தில் நடித்துள்ள அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரின் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
சமீப நாட்களாக விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சூழலில், இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது.
cinema
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் அப்டேட் !
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் அப்டேட் !
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34 ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.
இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது.
சென்னை, டெல்லி, ரஷ்யா, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் திரைப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜூ ஜார்ஜுக்கு காலில் காயம் ஏற்பட, முக்கியக் காட்சிகளை எடுப்பதில் தாமதமானது.
இறுதியாக, சில நாட்களுக்கு முன் முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ‘தக் லைப்’ திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
Employment4 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized4 months ago
Hello world!
-
cinema4 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
tamilnadu4 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema4 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
india4 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india4 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்
-
Employment3 months ago
இந்திய ரயில்வேயில் 7951 நிரந்தர பணியிடங்கள்