Connect with us

cinema

நடிகை சோனாக்ஷி சின்ஹா கர்ப்பமா?

நடிகை சோனாக்ஷி சின்ஹா கர்ப்பமாக இருப்பதாக பரவி வந்த வதந்திகள் குறித்து மௌனத்தை கலைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் ஜஹீர் இக்பாலுடன் திருமணம் செய்து கொண்ட சோனாக்ஷி சின்ஹா, மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே பத்திரிக்கையாளர்களால் பார்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் ஜஹீர் இக்பாலுடன் தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.

இருப்பினும்,  சோனாக்ஷி  அளித்த பேட்டியில், வதந்திகளை பற்றி சூசகமாக கிண்டல் செய்து, “இப்போது மருத்துவமனைக்கு கூட போக முடியவில்லை. ஏனென்றால், வெளியே வந்த உடனே மக்கள் நாம் கர்ப்பமாக இருப்பதாக நினைக்கிறார்கள்” என்று டைம்ஸ் நவ்விடம் சோனாக்ஷி தெரிவித்தார்.

சோனாக்ஷி சின்ஹா ஜூன் 23, 2024 அன்று ஜஹீர் இக்பாலுடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர், நடிகையின் பாந்த்ரா இல்லத்தில் ஒரு நெருக்கமான விழாவை நடத்தினர். பின்னர், திருமண புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்ட இந்த புதுமணத் தம்பதிகள், “இதே நாளில், ஏழு வருடங்களுக்கு முன்பு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம், காதலை அதன் தூய வடிவில் பார்த்தோம், அதைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தோம்.

இன்று அந்த காதல் எங்களை அனைத்து சவால்களையும் வெற்றிகளையும் கடந்து இந்த தருணத்திற்கு இட்டுச் சென்றுள்ளது… எங்கள் இரு குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடனும், எங்கள் இரு கடவுள்களுடனும்… நாங்கள் இப்போது கணவன் மனைவி. இனி எப்போதும் எங்களுக்கிடையே அன்பு, நம்பிக்கை மற்றும் அனைத்து அழகான விஷயங்களுக்கும் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *