tamilnadu

நாகர்கோவில் நெத்திலி மீன் அவியல்

நாகர்கோவில் நெத்திலி மீன் அவியல்

நெத்திலி மீன் அவியல், தமிழ்நாட்டின் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் பிரபலமான ஒரு மிகசுவையான மீன் உணவாகும். இது நெத்திலி மீன், தேங்காய், கறிவேப்பிலை, மசாலா பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது தனி சிறப்பு.

இதன் சுவை மனதை மயக்கும்.

 

நெத்திலி மீன் அவியல் தேவையான பொருட்கள்

  • நெத்திலி மீன் – 250 கிராம்
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • சின்ன வெங்காயம் – 5
  • பூண்டு – 2 பல்
  • பச்சை மிளகாய் – 3
  • கிளி மூக்கு மாங்காய் – தேவைக்கு
  • புளி – சிறிய எலுமிச்சை அளவு
  • தண்ணீர் – 1/4 கப்
  • கறிவேப்பிலை – சிறிது
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • சீரகம் தூள் – 3/4 தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

    செய்முறை

  • நெத்திலி மீனை சுத்தம் செய்து, உப்பு சேர்த்து தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புளி, தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
  • ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் சூடாக்கி, கடுகு தாளிக்கவும்.
  • கடுகு தாளித்ததும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • அரைத்த மசாலா கலவையை சேர்த்து, நன்கு வதக்கவும்.
  • மசாலா வாசனை வரும் வரை வதக்கிய பின், ஊற வைத்திருக்கும் நெத்திலி மீனை சேர்க்கவும்.
  • உப்பு சேர்த்து, நன்கு கிளறி விடவும்.
  • தேவையான அளவு தண்ணீர் , வெட்டிய மாங்காய் சேர்த்து மூடி வைத்து 5 முதல் 6 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • மீன் வெந்து, மசாலா கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
  • தேவையென்றால், மேலும் உப்பு சேர்த்து சரிசெய்யவும்.
  • நெத்திலி மீன் அவியல் தயார்!

சூடான சாதத்துடன் நெத்திலி மீன் அவியலை பரிமாறவும்.ரசம் சேர்த்து சாப்பிடலாம்.
நெத்திலி மீன் அவியல் செய்து சுவைத்து பாருங்கள்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago