Connect with us

cinema

மிரட்டும் டிமாண்டி காலனி 2 டிரைலர்

Published

on

மிரட்டும் டிமாண்டி காலனி 2 டிரைலர்

  • அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம், ‘டிமான்டி காலனி‘ அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியானது.
  • ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து
  • தற்போது 8 வருடங்களுக்கு பிறகு படத்தின் 2ம் பாகம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.
  • இந்த படத்தின் டிரைலர் நேற்றையதினம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
  • பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் போன்றோர் படத்தில் நடித்துள்ளனர்.
  • மிரட்டலான டிரெய்லர் மக்களின் எதிர்பார்ப்பை இன்னும் சுவாரசியமான பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

cinema

ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!

Published

on

By

ரஜினியின் 74வது பிறந்தநாள் - கருங்கல் சிலை வழிபாடு!

ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!

நடிகர் ரஜினி தீவிர ரசிகர் ஒருவர் 74வது பிறந்தநாளை 300 கிலோ எடையில் அவரின் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு மேற்கொண்டுள்ளார்.

திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினியின் மீது கொண்டுள்ள தீவிர அன்பால் ‘அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்’ என்ற பெயரில் கோயில் உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்.

ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 300 கிலோ எடையில் புதிய ரஜினி சிலை ஒன்றை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.

250 கிலோ எடையில் ரஜினி சிலை உள்ளது குறிப்பிடதக்கது.

சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை ஆகும்.

புதிய சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பூந்தி ஆகியவைகளால் அபிஷேகம் செய்து, யாகம் வளர்த்து, ரஜினி நூற்றாண்டுகள் வாழ வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Continue Reading

cinema

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

Published

on

By

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

புஷ்பா 2′ திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் படைத்தது.

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார்.

ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார்.

இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் நேற்று பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது.

3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.

முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது.

திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி வசூலை குவித்திருப்பதாக தகவல்.

Continue Reading

cinema

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

Published

on

By

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவ.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வசூல் சாதனை செய்யும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், நெகட்டிவ் விமர்சனங்களால் படம் வசூலில் அடி வாங்கியது.

ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 180 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாகத் தெரிகிறது.

படம் வெளியாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Continue Reading

Trending