Connect with us

tamilnadu

பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

Published

on

பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

  • பொறியியல் பொது பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது.
    இதில் முதல் சுற்றில் 30264 மாணவர்கள் கலந்தாலோசிக்க தகுதி.
  • 2024-2025 இந்த கல்வியாண்டில் 433 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பம்.
  • 2,33,000 மாணவர்களுக்கான காலி இடங்கள் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
  • இதில் அரசு இட ஒதுக்கிடுபடி 1,80,000 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இன்று முதல் தொடங்கி மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது.
  • ஜூலை 25-28 ஆம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் ஆகியோருக்கான 9,547 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
  • முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,243 மாணவர்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 2,113 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 416 மாணவர்களும் என 3,772 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
  • 744 மாணவர்கள் இறுதி ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுள்ளனர்.
  • கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தேர்வானதும் கல்லூரி கட்டணம் செலுத்தி SUMBIT செய்து கொள்ளலாம்.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

பாஜக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

Published

on

By

பாஜக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

பாஜக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

பாஜக சார்பில் நடக்கும் இஃப்தார் நோன்பு குறித்து சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.

சென்னையில் மூன்றாவது முறையாக இப்தார் நிகழ்ச்சி நடக்க உள்ளது.‌

திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் நடத்தாத வகையில் சென்னை எழும்பூரில் இஃப்தார் நோன்பு நாளை மாலை 4:30 மணிக்கு தொடங்க உள்ளது.‌

கூட்டணி கட்சித் தலைவர்கள் அதில் பங்கேற்க உள்ளார்கள்.

பாஜகவின் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.‌

உண்மையான இஸ்லாமியர்கள் யார் பொய்யான இஸ்லாமியர்கள் யார் என்பதை முடிவு செய்யும் இடத்தில் திமுக இருக்கிறது என்றால் மோசமானது.

திமுகவின் அரசியலை இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள்.‌

அனைத்துக் கட்சியையும் நாங்கள் மதிக்கிறோம் கல்வி, பொருளாதாரம், அரசியலுக்கான முன்னெடுப்பு குறித்த அண்ணாமலை அறிவிப்பு தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு கூறினார்கள்.

Continue Reading

india

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

Published

on

By

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!
கொல்கத்தா – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று கோலகலமாக தொடங்குகிறது.

தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன.

கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

தொடக்க நிகழ்ச்சியில் பாடகா்கள் ஷ்ரேயா கோஷல், கரண் அஜ்லா, பாலிவுட் நடிகை திஷா பட்டானி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சிகள் மாலை 6 மணியளவில் தொடங்கி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது.

மொத்தம் 70 போட்டிகளை கொண்ட லீக் சுற்று, மே 18ம் தேதி முடிகிறது.

இன்றைய ஆட்டத்திற்காக கொல்கத்தா, பெங்களூரு அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

Continue Reading

india

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

Published

on

By

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

தேமுதிக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

ரமலான் நோன்பினை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

“புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகள் அதிகம் செய்யும் மாதம், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று, இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர்.

வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை சனிக்கிழமை மாலை 6 மணியளவில் கொண்டாடப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இஸ்லாமிய பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக வருகை தந்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

Trending