Connect with us

india

கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து

Published

on

கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து

வயநாடு நிலசரிவால் பலர் பதிப்பப்பட்டுள்ள நிலையில் மாநில அளவிலான கொண்டாட்டங்கள் ரத்து செய்தது கேரள அரசு.

கடந்த ஜூலை 27ம் தேதி கேரளாவில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

அதில் சுமார் 450க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

உடல் அடையாளம் தெரியாமல் பலரது உடல் பாகங்கள் மட்டுமே கிடைக்க பெற்றது சிலரது குடும்பம் முழுவதும் சிலசரிவில் சிக்கி உயிரிழந்தனர்

மீட்பு பணிகள் என்னும் நடைபெற்று வருகையில் பலரது உடல்கள் கிடைக்க பெறுகிறது இந்த துயர சம்பவம் கேரளாவில் பெரிதும் பாதித்தது.

இது குறித்து கேரளா முதலமைச்சர் பினராஇ விஜயன் நடப்பு ஓணம் பண்டிகை மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கேரளா அரசு கேவேண்டுகோள் விடுத்துள்ளது .

india

ஆதார் புதுப்பிக்க செப்.14 கடைசி நாள் என்பது வதந்தி – ஆதார் ஆணையம் விளக்கம்!

Published

on

By

ஆதார் புதுப்பிக்க செப்.14 கடைசி நாள் என்பது வதந்தி – ஆதார் ஆணையம் விளக்கம்!

ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 தேதியே கடைசி நாள் என்பது தவறான தகவல் என ஆதார் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாகும்.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்றது ஆதார் ஆணையம்.

செப்.14 வரை தான் கால அவகாசம் உள்ளது என தகவல் பரவியது.

தற்போது இ- சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.

ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது,.

ஆதார் இணையதளத்தில் முகவரியை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது. இலவசமாக முகவரி மாற்றத்தைப் பதிவு செய்யலாம்.

புதுப்பிக்காவிட்டாலும் அட்டை செயல்பாட்டில்தான் இருக்கும். சேவைகள் எதுவும் பாதிக்காது.

செப்டம்பர் 14ம் தேதிக்கு புதுப்பித்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆதாரை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் ரத்தாகிவிடும் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

ஆதார் புதுப்பிக்க இம்மாதம் 14ம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி.

இவ்வாறு ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continue Reading

cinema

Goat வசூல் நிலவரம் என்ன?

Published

on

By

Goat வசூல் நிலவரம் என்ன?

மூன்றாவது நாளிலேயே தி கோட் திரைப்படம், இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.100 கோடியை கடந்து வசூலித்துள்ளது.

சுமார் 215 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த வியாழனன் அன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது.

இரண்டாவ்து நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் பல திரையரங்குகளிலும் ஹவுஸ்-ஃபுல் காட்சிகளாக ஓடுவதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக இப்படம், சுமார் 215 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading

cinema

முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி! TVK தலைவர் விஜய் அறிக்கை!

Published

on

By

முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
TVK தலைவர் விஜய் அறிக்கை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே.

எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம்.

இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்.

அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது.

இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.

இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.

தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்.

வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Continue Reading

Trending