Uncategorized

முதல் தேசிய விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

முதல் தேசிய விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

தேசிய விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை அனுப்பியது.

ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனையை படைத்தது.

உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது.

இந்தியாவின் இந்த சாதனையை கொண்டாடும் தினமாக மத்திய அரசு ஆகஸ்ட் 23-ஐ தேசிய விண்வெளி தினமாக அறிவித்தது.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “முதல் தேசிய விண்வெளி தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள். விண்வெளித் துறையில் நமது நாட்டின் சாதனைகளை மிகுந்த பெருமையுடன் நினைவுகூர்கிறோம். நமது விண்வெளித்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் பங்களிப்பைப் போற்றும் நாள். நமது அரசு விண்வெளித் துறை தொடர்பான தொடர்ச்சியான எதிர்கால முடிவுகளை எடுத்துள்ளது. மேலும், வரும் காலங்களில் நாம் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago