Uncategorized

புதுச்சேரியில் இன்று முதல் மின்கட்டணம் உயர்கிறது

புதுச்சேரியில் இன்று முதல் மின்கட்டணம் உயர்கிறது

ஜூன் மாதம் 16ஆம் தேதி  அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மின் கட்டண உயர்வு தற்போது மாற்றமின்றி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு 65 முதல் 85 காசுகள் வரை மின் கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரத்திற்கு முன்பு 2.25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 2.70 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

101 முதல் 200 யூனிட் மின்சாரத்திற்கு 4 ரூபாயாகவும், 201 முதல் 300 யூனிட் மின்சாரத்திற்கு 6 ரூபாயும், 300 யூனிட்டுகளுக்கு மேல் 7.50 ரூபாயாகவும் கட்டணமானது உயர்த்தப்பட்டுள்ளது.

உயர் மின்னழுத்த லைன் கட்டணம் யூனிட்டுக்கு 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாய பயன்பாடுகளுக்கான மின் கட்டணம் மாற்றமில்லை.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago