Connect with us

tamilnadu

அமெரிக்காவில் 4 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!

Published

on

அமெரிக்காவில் 4 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!

அமெரிக்காவில் பள்ளியில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 14 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.

தாக்குதலில் 2 ஆசிரியர்கள், 2 மாணவர்க என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

8 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் காயமடைந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் கோல்ட் கிரே என அடையாளம் காணப்பட்டார்.

சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

By

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது.

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

Continue Reading

india

லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!

Published

on

By

லெபனான் மீது தரைவழி தாக்குதல் – தீவிரமடையும் போர்!

லெபனானின் தென்மேற்கு பகுதிகளிலும் தங்களின் தரைவழி தாக்குதலை அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அக்.7ஆம் தேதி காசாவில் உள்ள ஹமாஸ் dஅமைப்பு, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் ஹமாஸ் மீது போரை அறிவித்தது.

தற்போதுவரை பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இஸ்ரேலின் மொத்த கவனமும் ஹமாஸ் பக்கத்திலிருந்து, ஹிஸ்புல்லா பக்கம் திரும்பியுள்ளது.

இரண்டு இயக்கங்களுக்கும் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது ஈரான். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் தொடங்கியது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

“தென்மேற்கு லெபனானில் தரைவழி தாக்குதல் நடவடிக்கையை புதிதாகத் தொடங்கியுள்ளோம் 146-ஆவது பிரிவு ரிசர்வ் படையினர் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடவடிக்கையின்போது, அங்குள்ள ஹமாஸ் ‘பயங்கரவாத’ நிலைகள் மற்றும் கட்டமைப்புகளை மட்டும் குறிவைத்து, துல்லிய தாக்குதல் நடத்தப்படும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading

india

கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை!

Published

on

By

கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை!

சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

கோயம்பேடு சந்தை மிகவும் பிரபலமானது. இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களின் விலை தற்போது அதிகரித்துள்ளது.

மல்லிகைப்பூ ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும், ஐஸ் மல்லிகைப்பூ ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் ரூ.300 வரை அதிகரித்துள்ளது.

சாமந்தி பூ கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சம்மங்கி பூ கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. செவ்வந்தி கிலோ 200 ரூபாய்க்கும், வெள்ளை செவ்வந்தி கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Continue Reading

Trending