ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 தேதியே கடைசி நாள் என்பது தவறான தகவல் என ஆதார் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாகும்.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்றது ஆதார் ஆணையம்.
செப்.14 வரை தான் கால அவகாசம் உள்ளது என தகவல் பரவியது.
தற்போது இ- சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சுமார் 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.
ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது,.
ஆதார் இணையதளத்தில் முகவரியை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது. இலவசமாக முகவரி மாற்றத்தைப் பதிவு செய்யலாம்.
புதுப்பிக்காவிட்டாலும் அட்டை செயல்பாட்டில்தான் இருக்கும். சேவைகள் எதுவும் பாதிக்காது.
செப்டம்பர் 14ம் தேதிக்கு புதுப்பித்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதாரை புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் ரத்தாகிவிடும் என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
ஆதார் புதுப்பிக்க இம்மாதம் 14ம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி.
இவ்வாறு ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…