Connect with us

cinema

அக்.3ல் ஓடிடியில் வெளியாகும் கோட்!

Published

on

அக்.3ல் ஓடிடியில் வெளியாகும் கோட்!

விஜய்யின் 68வது திரைப்படம் ‘தி கோட்’அடுத்த மாதம் அக்.3ல் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கினார்.

கடந்த செப்.5ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

உலகம் முழுவதும் ரூ.440 கோடிக்குமேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் 3ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

நீக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் ஓடிடியில் வெளியாகும்.

ஓடிடியில் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

cinema

தமிழக பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் – த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !

Published

on

By

தமிழக பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் - த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !

தமிழக பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் – த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்க உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் தமிழக பெண்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, அன்புத் தங்கைகளே கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்.

அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் “ என தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

cinema

நடிகர் விஜயின் சச்சின் திரைப்படம் ரீ ரிலிஸ் உறுதி!

Published

on

By

நடிகர் விஜயின் சச்சின் திரைப்படம் ரீ ரிலிஸ் உறுதி!

நடிகர் விஜயின் சச்சின் திரைப்படம் ரீ ரிலிஸ் உறுதி!

நடிகர் விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் ரீ ரிலிஸ் செய்ய உள்ளதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார்.

கடந்த 2005-ம் ஆண்டு ஜான் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் தான் சச்சின். இதில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் என பலர் நடித்துள்ளனர்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உறுவான இப்படம் பாடல்கள் அனைத்தும் பெருமளவு ஹிட்டாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.

காமெடி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

மிகவும் அழகான கெமிஸ்டிரி விஜய் மற்றும் ஜெனிலியா இருவருக்கும் இப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்டனர்.

சச்சின் திரைப்படம் 20 ஆண்டுகள் ஆக போகின்ற நிலையில் ஏப்ரல் மாதம் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் முதலில் வெளியான போது கிடைத்த வரவேற்பை காட்டிலும் இந்த முறை லாபம் வரப்போகுது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பேசியுள்ளார்.

 

Continue Reading

cinema

கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி!

Published

on

By

கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி!

கோயம்பேட்டில் தடையை மீறி தேமுதிகவினர் அமைதி பேரணி!

விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது.

கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது.

விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.

முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏராளமான ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் குவிந்து வருகின்றனர்.

விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது.

காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Continue Reading

Trending