அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
அஜித்குமார் நடிக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.
படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்தாக ஜூலை 22ம் தேதி படக்குழு அறிவித்தது.
போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில் சமீப நாட்களாக விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
அஜித் ரசிகர் ஒருவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
“விடாமுயற்சி ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்தால் நானும், என் நண்பர்களும் மதுரையில் இருந்து வந்து உங்களுக்கு ஓட்டு போடுவோம் டிரம்ப்” என வருத்தப்படாத வாலிபர் சங்க பட வீடியோவுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் டீம் ஆட்டமேட்டிக் மெசேஜ் அனுப்பியுள்ளது.
“வடக்கு கரோலினா பற்றி முக்கிய தேர்தல் அப்டேட்டுகளை அனுப்பி வைக்கிறேன். நவம்பர் 5ம் தேதி டொனால்டு டிரம்புக்கே வாக்களிக்கவும்” என குறிப்பிடப்பட்டிருந்தது
இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இதற்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டிரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்!
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…