tamilnadu

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் அப்டேட் !

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ ரிலீஸ் அப்டேட் !

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’  படத்துக்குப் பின் 34 ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.

இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட்  மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது.

சென்னை, டெல்லி, ரஷ்யா, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் திரைப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜூ ஜார்ஜுக்கு காலில் காயம் ஏற்பட, முக்கியக் காட்சிகளை எடுப்பதில் தாமதமானது. 

இறுதியாக, சில நாட்களுக்கு முன் முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. 

அதன்படி, ‘தக் லைப்’ திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago