Uncategorized

இன்னும் இரண்டு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்!

தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் இரண்டு  நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியானது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது.

ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் 9-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது.

சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.

தொடர்ந்து குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்த்தப்பட்டது.

தற்போது கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு 8,932 காலிப்பணியிடங்களாக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குரூப் 4 முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

தீபாவளிக்கு முன்னதாக முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் எந்த தேதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிடுவது என்பது குறித்து  முடிவெடுப்பதற்காக தேர்வாணையத்தின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகளை தீபாவளிக்கு முன்னதாக, நாளை மறுதினம் (2 நாட்களுக்குள்) வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முதன்முறையாக தேர்வு நடைபெற்று மூன்று மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago