அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.
சுமார் 30 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிவடைந்ததாக ஜூலை 22ம் தேதி படக்குழு அறிவித்தது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது.
அதில் நடிகர் அஜித் உட்பட படக்குழுவினர் இடம்பெற்றிருந்தனர்.
அதன்பின், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.
இப்படத்தில் நடித்துள்ள அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரின் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
சமீப நாட்களாக விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சூழலில், இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…