Connect with us

india

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை!

Published

on

ஒரு கிராம் 8000-த்தை கடந்த தங்கம் விலை!

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது

india

பாஜக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

Published

on

By

பாஜக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

பாஜக சார்பில் நாளை இஃப்தார் நோன்பு!

பாஜக சார்பில் நடக்கும் இஃப்தார் நோன்பு குறித்து சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.

சென்னையில் மூன்றாவது முறையாக இப்தார் நிகழ்ச்சி நடக்க உள்ளது.‌

திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் நடத்தாத வகையில் சென்னை எழும்பூரில் இஃப்தார் நோன்பு நாளை மாலை 4:30 மணிக்கு தொடங்க உள்ளது.‌

கூட்டணி கட்சித் தலைவர்கள் அதில் பங்கேற்க உள்ளார்கள்.

பாஜகவின் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.‌

உண்மையான இஸ்லாமியர்கள் யார் பொய்யான இஸ்லாமியர்கள் யார் என்பதை முடிவு செய்யும் இடத்தில் திமுக இருக்கிறது என்றால் மோசமானது.

திமுகவின் அரசியலை இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள்.‌

அனைத்துக் கட்சியையும் நாங்கள் மதிக்கிறோம் கல்வி, பொருளாதாரம், அரசியலுக்கான முன்னெடுப்பு குறித்த அண்ணாமலை அறிவிப்பு தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு கூறினார்கள்.

Continue Reading

india

டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்!

Published

on

By

டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்!

டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்!

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆபத்தான நிலையில் போராடி வந்த அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதி சடங்கள் குறித்த கேள்விகள் வாடிகனில் எழுந்ததது.

கடந்த மார்ச் முதல் வாரத்தில் அவர் அபாய நிலைய தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்.

இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்” என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவமனையில் கூடியிருந்து நூற்றுக்கணக்கான மக்களுக்கு கை அசைத்து ஆசீர்வாதம் வழங்கினார்.

சிகிச்சைக்கு பிறகு போப் பிரான்சிஸ் வீடு திரும்ப உள்ளார்.

Continue Reading

india

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

Published

on

By

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!

இன்று ஐபிஎல் திருவிழா தொடக்கம்!
கொல்கத்தா – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று கோலகலமாக தொடங்குகிறது.

தொடரில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன.

கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

தொடக்க நிகழ்ச்சியில் பாடகா்கள் ஷ்ரேயா கோஷல், கரண் அஜ்லா, பாலிவுட் நடிகை திஷா பட்டானி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சிகள் மாலை 6 மணியளவில் தொடங்கி இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது.

மொத்தம் 70 போட்டிகளை கொண்ட லீக் சுற்று, மே 18ம் தேதி முடிகிறது.

இன்றைய ஆட்டத்திற்காக கொல்கத்தா, பெங்களூரு அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

Continue Reading

Trending