சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகளின் போது, நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். சீசன் காலத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் செய்து தரும்.
பக்தர்களில் சிலர் மாரடைப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகிறது.
சபரிமலையில் பல இடங்களில் மருத்துவ உதவி மையங்களை கேரள அரசும், தேவசம்போர்டும் அமைத்துள்ளது.
மகர விளக்கு பூஜைகள் நெருங்கியுள்ள நிலையில், இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும்.
தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீசன் நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான போர்டு அறிவித்தது.
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விபத்தில் மரணம் அடைய நேரிட்டால், அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினசரி கூலி தொழிலாளர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள் என தேவஸ்தான போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்திருந்தார்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் தான் ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு என பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…