’அமரன்’ திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி முகுந்தின் மனைவி ரெபெகாவாகவும் நடித்துள்ளனர்.
அமரன் படத்தில் முகுந்த் வரதராஜனின் காதல் வாழ்க்கை மற்றும் ராணுவத்தில் அவர் சந்தித்த சவால்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக காஷ்மீரில் சண்டை போடும் காட்சியில் சாய் பல்லவியின் நடிப்பு பாராட்டப்பட்டது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான ’அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமரனுக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாண்டு தமிழ் படங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூல் செய்த படமாக ’டான்’ 125 கோடி வரை வசூல் செய்தது, ஆனால் அமரன் அதை முறியடித்துள்ளது.
சாக்னில்க் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் 218.6 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் 76.75 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் அமரன் 300 கோடி வசூலை தாண்டியுள்ளது.
’விக்ரம்’ திரைப்படத்திற்கு பிறகு மிக அதிக லாபத்தை கொடுத்துள்ளது.
மேலும் ரஜினியின் ’எந்திரன்’ (216 கோடி), விஜய்யின் ’பிகில்’ (295.85), ’வாரிசு’ (297.55) ஆகிய படங்களின் வசூலை முறியடித்துள்ளது. அமரன் திரைப்படம் 350 கோடிக்கும் மேலாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி ரிலீஸை தள்ளி வைக்க தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…