மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு இளம் ஸ்டிரைக்கர் தீபிகா சிறப்பான ரிவர்ஸ் ஹிட் கோல் அடித்து அசத்தினார்.
முன்னதாக லீக் சுற்றில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த விருதுகளை வென்ற நிலையில், தற்போது இந்தியா மூன்றாவது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில்,
“இது ஒரு அபாரமான சாதனை. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற எங்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் போட்டியின் போது சிறப்பாக விளையாடினர். அவர்களின் வெற்றி பல வரவிருக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…