Connect with us

cinema

சென்னையில் நடைபெறும் புஷ்பா 2 புரமோஷன் நிகழ்ச்சி!

Published

on

சென்னையில் நடைபெறும் புஷ்பா 2 புரமோஷன் நிகழ்ச்சி!

சென்னை தாம்பரத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான ‘புஷ்பா’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது.

கிட்டத்தட்ட ரூ. 350 கோடியை மேல் இந்த திரைப்படம் வசூலித்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

‘புஷ்பா 2: தி ரூல்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.

‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் மக்கள் பெரிதும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

அதாவது வரும் 24ம் தேதி தாம்பரம் சாய் ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் உள்ள லியோ முத்து லிங்கம் அரங்கில் “ஒயில்ட் பயர்” நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.

cinema

தக் லைஃப் படம் வெளியீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – கர்நாடக அரசு உறுதி!

Published

on

By

தக் லைஃப் படம் வெளியீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் - கர்நாடக அரசு உறுதி!

தக் லைஃப் படம் வெளியீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – கர்நாடக அரசு உறுதி!

கர்நாடக அரசு தக் லைஃப் படம் வெளியீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி வெளியான தக் லைஃப்.திரைப்படம் திரைப்படம் வெளியானது.

கமல் ஹாசன்,சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று கமல் ஹாசன் கூறியிருந்தார்.

கன்னட அமைப்புகளிடம் கர்நாடக வர்த்தக சபை மன்னிப்பு கேட்க கோரி எதிர்ப்பு கிளம்பியது.

தக் லைஃப் படக்குழு படத்தின் வெளியீட்டை கர்நாடகாவில் ஒத்தி வைத்தது.

வரும் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும்.

படத்தை தடை செய்வது ஏற்புடையதல்ல” என்று கூறி இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது

ட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கும் படத்தை பார்க்க வருவோருக்கும் திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

cinema

“அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை” – உருக்கமாக பேசிய விஜய்!

Published

on

By

அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை” - உருக்கமாக பேசிய விஜய்!

“அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை” – உருக்கமாக பேசிய விஜய்!

3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் அகமதாபாத் விமான விபத்து குறித்து விஜய் பேசினார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி வந்தார்.

மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் கடந்த ஜுன் 4ம் தேதி நடந்து முடிந்தது.

3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

வருகை தந்த விஜய் அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசினார்.

“அனைவருக்கும் வணக்கம். குஜராத்தில் நேற்று மிகப்பெரிய விமான விபத்து நடைபெற்றது.

சோகமான சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்களை பார்க்கும்போது மனசே பதறுது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்காகவும் இரண்டு நிமிடம் மௌ அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

Continue Reading

cinema

கமல் 4% வாக்குகளை அடமானமாக வைத்து எம்.பி. ஆனவர் – பாண்டியன்

Published

on

By

Kamal became MP by mortgaging 4% of votes - Pandian

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதை பத்திரிகையாளர் பாண்டியன் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் படங்களின் தலைப்புகள் தமிழில் இருக்க வேண்டும் என்றும், ரசிகர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமலின் அரசியல் மற்றும் வணிக நகர்வுகள்:

கமல்ஹாசன், “கன்னடம் தமிழிலிருந்து வந்தது” என்று கூறியது கர்நாடகாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது திட்டமிட்ட விளம்பர யுக்தி என்றும், கர்நாடகாவில் பட வெளியீட்டில் ஏற்படும் 30 கோடி ரூபாய் நஷ்டம், உலக சந்தையில் கிடைக்கும் 200 கோடி ரூபாய் லாபத்துடன் ஒப்பிடும்போது பெரியதல்ல என்றும் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவில் இருந்து எம்.பி. பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே கமல் இவ்வாறு பேசியதாகவும், பதவி அறிவிப்பு வராமல் இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். கமல் ஒரு உறுதியான கொள்கையாளர் அல்ல என்றும், 4% வாக்குகளை அடமானமாக வைத்து எம்.பி. ஆனவர் என்றும் பாண்டியன் விமர்சித்துள்ளார்.

திராவிட அரசியல் மற்றும் மொழி உணர்வு:

தமிழர்கள் தங்களது மொழி மற்றும் இன உணர்வை இழந்துவிட்டதாகவும், கன்னடர்கள் மற்றும் மராட்டியர்களைப் போல மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் பாண்டியன் ஆதங்கப்பட்டுள்ளார்.

“திராவிடம்” என்ற கொள்கையே தமிழர்களின் மொழி உணர்வை அழித்துவிட்டது என்றும், திராவிடத்தை தூக்கி எறிந்துவிட்டு தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கன்னடர்களும் மராட்டியர்களும் உண்மையான தேசியவாதிகள் என்றும், அவர்களைப் பார்த்து தமிழர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Continue Reading

Trending