Uncategorized

2027வரை ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிடு!

2027வரை ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிடு!

2025 முதல் 2027 வரை 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரையும், 2027ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதிகள் குறித்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும், போட்டியின் அட்டவணைகளை கடைசி நேரத்தில் பிசிசிஐ அதிகாரிகள் வெளியிடுவதை தவிர்க்கவே அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் நாளை மறுநாள் (நவ. 24) முதல் இரண்டு நாள்களுக்கு ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெறுகிறது.

மொத்தம் 574 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ள பெயர்களை அளித்துள்ளனர்.

பாகிஸ்தானை தவிர மற்ற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஐபிஎலில் விளையாட தங்கள் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளனர்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago