Connect with us

cinema

சட்ட பூர்வமாக பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா!

Published

on

சட்ட பூர்வமாக பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா!

சட்ட பூர்வமாக பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா!

சென்னை குடும்பநல நீதிமன்றம் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகளின் திருமண வாழ்க்கைக்கு பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
.
இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாயிருந்தனர்.

இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தனுஷ், ஐஸ்வர்யாவிடம் கடந்த 21ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு நவ.27 ஆம் தேதி வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.

இருவருக்கும் விவாகரத்து வழங்கி, சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இருவரும் தற்போது ஆதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளனர்.

இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி சுபாதேவி தீர்ப்பளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

cinema

ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!

Published

on

By

ரஜினியின் 74வது பிறந்தநாள் - கருங்கல் சிலை வழிபாடு!

ரஜினியின் 74வது பிறந்தநாள் – கருங்கல் சிலை வழிபாடு!

நடிகர் ரஜினி தீவிர ரசிகர் ஒருவர் 74வது பிறந்தநாளை 300 கிலோ எடையில் அவரின் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு மேற்கொண்டுள்ளார்.

திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் ரஜினியின் மீது கொண்டுள்ள தீவிர அன்பால் ‘அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்’ என்ற பெயரில் கோயில் உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்.

ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு 300 கிலோ எடையில் புதிய ரஜினி சிலை ஒன்றை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.

250 கிலோ எடையில் ரஜினி சிலை உள்ளது குறிப்பிடதக்கது.

சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை ஆகும்.

புதிய சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பூந்தி ஆகியவைகளால் அபிஷேகம் செய்து, யாகம் வளர்த்து, ரஜினி நூற்றாண்டுகள் வாழ வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Continue Reading

cinema

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

Published

on

By

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

புஷ்பா 2 இரண்டே நாட்களில் ரூ.400 கோடியை தாண்டிய வசூல்!

புஷ்பா 2′ திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் படைத்தது.

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார்.

ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார்.

இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது.

மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் நேற்று பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது.

3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.

முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது.

திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி வசூலை குவித்திருப்பதாக தகவல்.

Continue Reading

cinema

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

Published

on

By

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா!

சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவ.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வசூல் சாதனை செய்யும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், நெகட்டிவ் விமர்சனங்களால் படம் வசூலில் அடி வாங்கியது.

ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 180 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருப்பதாகத் தெரிகிறது.

படம் வெளியாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Continue Reading

Trending