india

கே-4 ஏவுகணை சோதனை வெற்றி!

கே-4 ஏவுகணை சோதனை வெற்றி!

அணுஆயுதத்தை தாங்கிச் செல்லும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

அணு ஆயுத திறன் கொண்ட வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது.

நேற்று விசாகப்பட்டினம் கடல் அருகே, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து, அணுஆயுதத்தை தாங்கி செல்லும் திறன் கொண்ட கே-4 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்தது இந்திய கடற்படை.

பாலிஸ்டிக் ஏவுகணை 3,500 கி.மீ., துாரம் சென்று இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது.

அரிகாட்டில் இருந்து கே- 4 ஏவுகணை சோதனை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அரிஹன்ட் மற்றும் அரிகாட் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் உள்ளன.

மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago