Employment
அரசு காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் உயர் நீதிமன்றம் கேள்வி!
அரசு காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் உயர் நீதிமன்றம் கேள்வி!
அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சுருக்கெழுத்தர், தட்டச்சர், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது.
சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
நுகர்வோர் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில், அனுமதிக்கப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் 230 பணியிடங்களில், 11 இளநிலை உதவியாளர்கள், இரண்டு சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் என 13 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டது.
காலியிடங்களை நிரப்ப கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Employment
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டி மற்றும் தங்கள் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
திமுக சார்பில் வி.சி.சந்திரசேகர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
அதிமுக போட்டியிடாது எனவும் அக்கட்சியியின் பொதுச்செயலாளலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
விக்ரவாண்டி இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
Employment
2025 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணை வெளியீடு!
2025 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணை வெளியீடு!
2025ம் ஆண்டு நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது. .
இந்த தேர்வு (குரூப் 4) குறித்த அறிவிப்பு ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு வெளியாக உள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகிறது.
அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Employment
போராட்டங்களை நடத்த போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!
போராட்டங்களை நடத்த போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை,அண்ணா பல்கலை பதிவாளரை நீக்க வேண்டும் எனவும் விவாதங்கள் நடைபெற்றது.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
போராட்டம் ,ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி வாங்க வேண்டும்.
காவல்துறையின் கட்டுப்பாடு. நேற்றுக்கூட ஆளுங்கட்சி சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
ஆளுங்கட்சியாகவே இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்திய திமுகவினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. போராட்டங்களை நடத்த அனுமதி வழங்குவதில் போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை” என்றார்.
மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களை உள்ளடக்கி 5,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் மத்திய அரசு அமைக்கவுள்ள டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தால் அப்பகுதியில் பல்லாயிரக்கணாக்கானோர் திரண்டதால் 2000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தென் மண்டல ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
நடைபயண பேரணி மேற்கொண்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட 5000 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3,000 ஆண்கள் மற்றும் 2,000 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Employment6 months ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 500 பணியிடங்கள்
-
Uncategorized7 months ago
Hello world!
-
cinema6 months ago
“இந்தியன் 2”: நீண்ட பயணம் முடிந்து திரையரங்குகளுக்கு வருகிறது!
-
tamilnadu6 months ago
Staff Selection Commission (SSC) – MTS 8326 பணியிடங்கள் 2024
-
cinema6 months ago
இந்தியன் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
-
india2 months ago
மெட்டா (Meta) நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்!
-
india6 months ago
அண்டிலியா வீடு: பிரம்மாண்டமான திருமண அலங்காரம்
-
india6 months ago
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம்