india

பாபர் மசூதி இடிப்பு தினம் – நெல்லையில் கடையடைப்பு போராட்டம்!

பாபர் மசூதி இடிப்பு தினம் – நெல்லையில் கடையடைப்பு போராட்டம்!

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லையில் இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு இடிக்கபட்டதில் இருந்து ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் அந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையத்தில் அணைத்து அரசியல் இயக்கங்கள் வணிகர் சங்கங்கள் ஜமாத் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

வி எஸ் டி சாலை, கொட்டிக்குளம் சாலை, பஜார் திடல், நேதாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் 100க்கும் மேற்பட்ட வாடகை வேன் மற்றும் கார்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது .

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி 1000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago