Ready to deal with any rain damage! Chief Minister M.K. Stalin's interview!
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழையால், சென்னையின் முக்கிய ஏரிகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நீர் ஆதாரங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.
புழல் ஏரியில் முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் முதற்கட்டமாக விநாடிக்கு 1,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது
பூண்டி ஏரியில் இருந்து தற்போது 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
கனமழை குறித்து 2 நாட்களாக ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எது வந்தாலும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம். தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏரிகளில் உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எங்களால் முடிந்தவரை ஒன்று கடுமையாக எதிர்ப்போம்” என கூறினார்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…