tamilnadu

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் – அண்ணாமலை சபதம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் – அண்ணாமலை சபதம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது,

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருந்து, அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன்.

மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

நாளை காலை 10 மணிக்கு என் வீட்டுக்கு வெளியே நின்று, என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்வேன்.

பாஜகவை சேர்ந்த ஒவ்வொருவரின் வீட்டின் முன்பும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும்.

நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம் எல்லாம் இருக்காது” என தெரிவித்தார்.

admin

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

9 months ago