விஜயகாந்த் நினைவிடத்தில் ஓபிஎஸ், சீமான் மரியாதை!
விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது.
விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.
முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏராளமான ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் குவிந்து வருகின்றனர்.
விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக கடைபிடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது.
காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…