விடுதலை 2 வெற்றிக் கொண்டாட்டம்!
விடுதலை 2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார்.
இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘விடுதலை’.
இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று, பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளையும் பெற்றது.
இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார்.
இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, ஆர் எஸ் போடெயின்மென்ட் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இதுவரை ரூ.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.
வெற்றி விழாவின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…