தமிழரின் மரபை நோக்கி சிவகார்த்திகேயனின் பயணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர கூடியவர்
அவர் நடிப்பில் வெளியான “அமரன்” திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை படைத்தது
தற்போது சிவகார்த்திகேயன் இரண்டு பெரிய படங்களில் நடித்து வருகிறார். முதலாவதாக, பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் “மதராசி”. இத்திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் “பராசக்தி” என்ற புதிய திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்
இந்த இரண்டு படங்களும் அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான திரைப்படப் பணிகளுக்கு மத்தியிலும், நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி அகழ்வாராய்ச்சித் தளத்தில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்திற்கு வருகை தந்தார்
இந்த அருங்காட்சியகம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் அரிய பொக்கிஷங்கள், அன்றைய மக்கள் பயன்படுத்திய 13,484 தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தையும் பண்பாட்டையும் நேரில் கண்டறிந்தது இளைய தலைமுறையினருக்கு நமது முன்னோர்களின் பெருமையை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…