ரூ.100 கோடி நிதியில் மகப்பேறு மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனை 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மருத்துவ கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 5 கோடி ரூபாய் செலவில் முழு உடல் பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களையும் துல்லியமாக கண்டறிய முடியும்.
மூன்றாம் பாலினத்தவருக்காக தனி பிரத்யேக வார்டு திறக்கப்பட்டிருக்கிறது.
நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் கட்டணத்தில் ஏசி வசதியுடன் கூடிய 27 அறைகள் கொண்ட வார்டும் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
மக்களைத் தேடி மருத்துவத்தில் இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் கண்டறியும் திட்டத்திற்கு ஐநா சபை விருது கிடைத்துள்ளது.
கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் பாம்புக்கடி, நாய்க்கடிக்கான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன
இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…