sports

டெல்லி அணியில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்

டெல்லி அணியில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்

 

டெல்லி அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் போட்டிகளில் இருந்து விலகுகிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

பின்னர், மீதமுள்ள லீக் மற்றும் பிளே ஆஃப் போட்டிகள் ஜூன் 3 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

டெல்லி அணி தற்போது புள்ளிப் பட்டியலில் 13 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

இன்னும் மூன்று லீக் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. அந்த போட்டிகள் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற உள்ளன.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க். ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில் திடீரென மிட்செல் ஸ்டார்க் அணியிலிருந்து விலகுகிறார் .மிட்செல் ஸ்டார்க்கிற்கு பதிலாக பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் டெல்லி அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி வீரர் விலகிய நிலையில், அணி எவ்வாறு செயல்படப் போகிறது மற்றும் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கப் போகிறதா என ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தையும்,பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago