india

இந்திய குழு ரஷ்ய வெளியுறவு குழுவுடன் கனிமொழி எம்.பி

இந்திய குழு ரஷ்ய வெளியுறவு குழுவுடன் கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி தலைமையிலான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற குழு, ரஷ்ய வெளியுறவு குழுவுடன் பயங்கரவாதம் மற்றும் Operation Sindoor குறித்த கலந்துரையாடல் நடத்தியது.

மத்திய அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட 7 குழுக்களை அமைத்துள்ளது.

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, இந்தியாவின் பார்வையை சர்வதேச தரப்பில் வலியுறுத்தும் பணி ஆற்றுகின்றன.

இதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ஜா, தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் உள்ளிட்டோர் தலைமையில் இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன.

இதைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டது.

கனிமொழி எம்.பி. தலைமையிலான இந்தக் குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

எங்கள் குழு இந்தியாவின் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம். இருநாடுகளுக்கும் பயங்கரவாதம் தொடர்பான ஒரே போலியான அக்கறைகள் உள்ளன என்பதை வலியுறுத்தினோம் என்று குறிப்பிட்டுள்ளார் கனிமொழி எம்.பி.

இந்தக் குழு ரஷ்யாவுக்குப் பிறகு லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் போன்ற பிற நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச அளவில் வலுப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago