cinema

உயிரோடு இருந்த போதே தனக்கு கல்லறை கட்டிவைத்த நடிகர் ராஜேஷ்

உயிரோடு இருந்த போதே தனக்கு கல்லறை கட்டிவைத்த நடிகர் ராஜேஷ்

நடிகர் ராஜேஷ் தனக்குத் தானே கட்டிய கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, டப்பிங் கலைஞர், எழுத்தாளரான ராஜேஷ் (75) மே 29 உடல்நலக் குறைவால் காலமானார்.

ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இன்று (மே 31)  நடிகர் ராஜேஷின் இறுதி ஊர்வலம் அசோக் நகரில் உள்ள வெற்றி சிலுவை சர்ச்சிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறப்பு இறுதி திருப்பலி நடைபெற்றது.

அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ராஜேஷ் 40 வயதிலேயே தனக்காகக் கட்டியிருந்த கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தக் கல்லறையில் ஏற்கனவே அவரது தாய், தந்தை மற்றும் மனைவி ஆகியோரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

marieeswari

Recent Posts

பிக் பாஸ் கேமிக்கு பாய் பாய்

நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…

5 months ago

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…

5 months ago

காசாவில் அல்-ஜசிரா பத்திரிகையாளர்கள் ஐந்து பேர் பலி

காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…

8 months ago

தேர்தல் ஆணையம் நீதிமன்றம் அல்ல ப.சிதம்பரம் கருத்து

அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…

8 months ago

தங்கம் விலை அதிரடி சரிவு சவரனுக்கு ₹560 குறைவு

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…

8 months ago

“திருமா எனது நண்பர்” நயினார் நாகேந்திரன் பேட்டி!

"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…

8 months ago