ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி விராட் கோலி ஃபில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர்.
ஃபில் சால்ட் 16 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 24 ரன்கள்,விராட் கோலி 35 பந்துகளுக்கு 43 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 190 ரன்கள் அடித்தது.
191 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது.
பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா முதலில் களமிறங்கினர்.
பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது.
6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“ஆர்சிபி அணிக்கு வாழ்த்துக்கள்! ஆச்சரியங்கள் நிறைந்த சீசனில் ஒரு சிலிர்ப்பூட்டும் முடிவு. இந்த கனவை பல ஆண்டுகளாக சுமந்து வந்து கிங் விராட் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானது.அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பமான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நேயர்களே, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இறுதியாக,…
தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஜி-20 நாடுகள் மாநாட்டில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய உரை…
காசா பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே…
அன்பார்ந்த நேயர்களே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி…
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி, தங்கம்…
"திருமா எனது நண்பர்" நயினார் நாகேந்திரன் பேட்டி! திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை கூட்டணிக்கு வருவாரா என நாம்…