இனி அத்திப்பழம் வேண்டாம் என்று சொல்வீர்களா?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

உணவே மருந்து என்ற கூற்றுக்கு ஏற்றார் போல அத்திப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்

அத்தி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். இரண்டு அத்தி பழத்தை தேனுடன் சேர்த்து பாலில் அரைத்து குடித்துவர இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடல் ஆரோகியத்தை பேணிக்காக்கும்.

இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிமாக உள்ளது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.

READ  ஒரே ஒப்பந்தத்தில் சோழிய முடிச்சுட்டாரே மோடி கதறும் திருமுருகன் காந்தி ! இனி எல்லாம் சென்னைதான் !

மலச்சிக்கலை முற்றிலும் குணமாக்க இரவு உணவிற்குப் பிறகு 5 உலர்ந்த அத்தி பழத்தை மென்று உண்டு வெந்நீர் குடித்து வர இப்பிரச்சனை முழுமையாக தீரும். பெருங்குடல் மற்றும் சிறு குடலில் உள்ள இறுகிய கழிவுகளை வெளியேற்றி குடலை மிருதுவாக்கிறது.  

Loading...

தாது விருத்தியாக 5 அத்திப் பழத்தை தினமும் காலை, மாலை என இரு வேளை தொடர்ந்து சாப்பிட்டு பால் அருந்தினால் இந்த பிரச்சனை முழுமையாக குணமாகும். அளவற்ற போஷாக்கை பெற உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அத்தி பழத்தை உலர்த்திப் பொடி செய்து தினமும் இரவு ஒரு ஸ்பூன் வீதம் பாலில் கலந்து குடித்து வர தூக்கமின்மை குணமாகும், பித்தம் குறையும்,

READ  ஒரு புலி இறந்தால் 1000 ஏக்கர் ! இப்போ தெரிகிறதா மோடி ஏன் புலிகளின் எண்ணிக்கையை தானே அறிவித்தார் என்று!

பெண்களுக்கு வெள்ளைப்படுதலை தடுக்கும், மாதவிடாய் நாட்களில் வயிற்று வலி ஏற்படுவதை தடுக்கும். அத்தி காயில் இருந்து பாலை எடுத்து, வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவிவர விரைவாக குணமாகும்.
அத்தி பழத்துடன் எலுமிச்சை மற்றும் பனை வெல்லம் சேர்த்து அரைத்து குடித்து வர வயிற்றில் உள்ள புண் ஆறும்.

இந்த ஜுசில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகள் நன்றாக செயல்பட செய்கிறது. தொடர்ந்து இந்த ஜுசை குடித்துவர கல்லீரல் வீக்கம் குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here