72 வயதில் இது தேவையா வசந்தகுமாரை கிழித்து தொங்கவிட்ட விஜயதரணி.

0

கன்னியாகுமரி..,

கன்னியாகுமரி எம் எல் ஏ -வசந்தகுமார் குறித்து காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதரணி கடுமையாக விமர்சனம் செய்திருப்பது காங்கிரஸ் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்று காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகிகள் அழுத்தம் இருப்பதாக காரியக்கமிட்டி கூட்டத்தில் பேசி இருந்தார் மேலும் மூத்த தலைவர்களால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இந்த நிலைமை என்றும் சொல்லியிருந்தார்.

அதனை கருத்தில் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று சிறப்பு விவாதம் ஒன்றிணை ஏற்பாடு செய்திருந்தது
இதில் கலந்துகொண்ட விஜயதரணி வெளிப்படையாக தமிழக காங்கிரஸ் தலைவர்களை வெளுத்து வாங்கி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராகுல் பேசியது 100% உண்மைதான் இங்கு தமிழகத்திலும் அதே நிலைமைதான் 72 வயதில் வசந்த குமாருக்கு எம் பி சீட் தேவையா இவருக்கு கொடுக்கவில்லை என்று யார் அழுதா. இதேபோல் மூத்த தலைவர்கள் அவர்களது மகன் பிள்ளை, பேரனுக்கு தமிழகத்தில் சீட் வாங்கினார்கள் இப்படியே போனால் கட்சி மோசமாகாமல் என்ன ஆகும்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஜெயித்தது திமுக துணையுடன் தான் என்றும் நேரடியாக வெளுத்து வாங்கி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரே சக காங்கிரஸ் தலைவர்களை வெளிப்படையாக ஊடகத்தில் வெளுத்து வாங்கி இருப்பது காங்கிரஸ் எவ்வாறு மூத்த அரசியல் வாதிகளின் வாரிசு பிடியில் சிக்கி இருக்கிறது என்பதனை தெளிவாக அறியமுடிகிறது.

©TNNEWS24

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here