இறந்து பிறந்த 995 குழந்தைகள்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில், 995 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி நாகை, திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலூர் கிராமத்திலிருந்து காலை 5 மணிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட குழந்தை, உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலை 11 மணியளவில் இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் உடலில் திடீரென அசைவு ஏற்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னரே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். காலையில் அழைத்து வந்தபோதே குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியுமென பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியதில், இந்த மருத்துவமனை மட்டுமின்றி தஞ்சை மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 995 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித்தகவல் வெளிவந்துள்ளது

READ  விஜய் சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் நகையை கொடுத்த முருகன் சிக்கும் பிரபல நடிகை யார்?

இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here