இனி பாகிஸ்தானுக்கு உதவ இயலாது, சீனா அறிவிப்பு…வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மாஸ்டர் பிளான் …

0
இது போன்ற செய்திகளை உங்களது வாட்ஸாப்பில் உடனடியாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் அனுப்பவும்

மூன்று நாள் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சென்றிருந்தார். அங்கே சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யுடன் கலந்துரையாடிய ஜெய்சங்கர், இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கியதற்கு , சீனா அதிர்ச்சியில் இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா சென்றது முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அப்போது அந்த சந்திப்பு குறித்து சீன தொலைக்காட்சி ஒன்றில் ஜெய்சங்கர் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது…

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட இரண்டு நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இது மற்ற நாடுகளின் வளர்ச்சிகும் வழிவகுக்கும், என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்தி உலக அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நம் இருநாட்டு உறவுகளுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அதை அறிந்துகொண்டு யாருக்கும் பிரச்சனை வராதவாரு சரிசெய்ய வேண்டும் என்று கலந்துரையாடியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

READ  இந்த பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு கேள்வி எழுப்பிய சிபிஐ சிதம்பரம் சொன்ன ஒற்றை பதில் !

இதன் காரணமாக, சீன பாராளுமன்றம் கூடி கலந்துரையாடியதில், பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று சொன்னால், பாகிஸ்தானுக்கு உதவ கூடாது என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியா, சீனாவின் இந்த ஒற்றுமைக்கு காரணமாக அமைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

மோடி அமைச்சரவையில் ஏன் ஜெய்சங்கருக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது இப்போது பலருக்கும் தெரிந்திருக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here